எகிறிய பெட்ரோல், டீசல் விலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
இன்று பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை இதன் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி 10 பைசா குறைந்ததில் லிட்டர் ரூ 100.80க்கு விற்பனையானது.
அது போல் டிசம்பர் 2 ம் தேதி எந்த மாற்றமும் இல்லை. மேலும் டிசம்பர் 3ஆம் தேதி 13 பைசா உயர்ந்து லிட்டர் பெட்ரோல் ரூ 100.93-க்கு விற்பனையானது.
உயர்வு
இந்நிலையில் டிசம்பர் 10-ஆம் தேதியான இன்று 10 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 100.90-க்கு விற்பனையாகி வருகிறது. டீசல் விலை லிட்டர் ரூ 92.49-க்கு விற்பனையாகி வருகிறது. விருதுநகர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், சிவகங்கை, சேலம், புதுக்கோட்டை,
நாமக்கல், கிருஷ்ணகிரி, கரூர், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தர்மபுரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் டீசலின் விலை இன்று சற்று உயர்வை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.