இன்று முதல் அமலுக்கு வரும் பாஸ்டேக்

bus money car
By Jon Feb 16, 2021 04:11 PM GMT
Report

நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. முக்கிய நகரங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. நேரமும் வீணாகிறது.

இதனால் இந்த பிரச்சினையை தவிர்க்க மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை, கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதற்கி வாகன உரிமையாளர்கள் மாறுவதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில், இதை கட்டாயம் ஆக்குவதற்கான தேதி அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் பாஸ்டேக் முறை கட்டாயம் ஆக்கப்படுவதாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது.

பாஸ்டேக் இல்லாமல் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.