இன்று முதல் Whatsapp இயங்காது - பயனர்கள் அதிர்ச்சி!

WhatsApp stoped
By Anupriyamkumaresan Nov 01, 2021 10:32 AM GMT
Report

பல கோடி மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று தான் வாட்ஸ் அப் (whatsapp). குறுந்தகவல்களை பரிமாரிக்கொள்ள இந்தியாவில் வாட்ஸ் அப் செயலி முன்னிலை வகிக்கிறது.

இதனிடையே, வாட்ஸ் அப் செயலி, சமீபத்தில் தனது சிஸ்டம் அப்டேட்களை அறிவித்து இருக்கிறது. இதில் ஒன்றுதான் பழைய ஓஎஸ்-ல் இயங்கும் சாதனங்களில் வாட்ஸ் அப் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் Whatsapp இயங்காது - பயனர்கள் அதிர்ச்சி! | Today Onwards Whatsapp Not Working In These Phone

ஆண்ட்ராய்டு 4.0.3 ஐஸ்கிரீம் சாண்ட்விச், ஐஓஎஸ் 9 உள்ளிட்ட சாதனங்களில் இன்று முதல் வாட்ஸ் அப் இயங்காது என தெரிவித்துள்ளது.

மேலும், வாட்ஸ்அப் அதன் கேள்விகள் பக்கத்தில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் வாட்ஸ்அப் அதன் கேள்விகள் பக்கத்தில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1, ஐபோன் ஐஓஸ் 10, கெய் ஓஎஸ் 2.5.1 மற்றும் ஜியோபோன், ஜியோபோன் 2 ஆகிய சாதனங்களில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. 

SAMSUNG

சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் லைட் 2, கேலக்ஸி எஸ்2, கேலக்ஸி எஸ்3 மினி, கேலக்ஸி எக்ஸ்கவர் 2, கேலக்ஸி கவர், கேலக்ஸி ஏஸ்2 

LG

எல்ஜி லூசிட் 2, ஆப்டிமஸ் எஃப்7, ஆப்டிமஸ் எஃப்5, ஆப்டிமஸ் எல்3 2, ஆப்டிமஸ் எல்7, ஆப்டிமஸ் எல்7 டூயல், ஆப்டிமஸ் எல் 7 2, ஆப்டிமஸ் எஃப் 6, ஆப்டிமஸ் எல்4 2 டூயல், ஆப்டிமஸ் எஃப் 3, ஆப்டிமஸ் எல்4 2, ஆப்டிமஸ் எல் 2 2, ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி, 4எக்ஸ் எச்டி, ஆப்டிமஸ் எஃப்3 க்யூ 

SONY

சோனி எக்ஸ்பீரியா மிரோ, சோனி எக்ஸ்பீரியா நியோஎல், எக்ஸ்பீரியா ஆர்க் 5 அதேபோல் ஆல்காடெல் ஒன் டச் எவோ 7, ஆர்கோஸ் 53 பிளாட்டினம், எச்டிசி டிசைர் 500, கேட்டர்பில்லர் கேட் பி15, விகோ கங்க் ஃபைவ், விகோ டார்க் நைட், லெனோவா ஏ820, யூஎம்ஐ எக்ஸ் 2 ஆகிய சாதனங்களில் இயங்காது.