சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் அரைநாள் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Chennai
By Thahir
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் தொடர்ந்து காலை முதல் விடாமல் பெய்து வரும் கனமழையால் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் காலை முதல் வானம் கடும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.இதனால் பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் வேலுார் மாவட்டத்தில் பள்ளி வகுப்புகளை மதியம் 3 மணிக்குள் முடிக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.