Today Gold Price: தங்கம் வாங்கப் போறீங்களா? இன்றைய விலை நிலவரம் இதோ!
இன்றைய அக்டோபர் 8ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாத தொடக்கத்திலேயே தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,710 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 அதிகரித்து ரூ.1,09,680 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
தொடர்ந்து, இன்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையே இன்றும் நீடிக்கிறது. அதன்படி, இன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,710க்கும், ஒரு சவரன் ரூ.1,09,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,265க்கும், ஒரு சவரன் ரூ.90,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
வெள்ளி விலையிலும் இன்று எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.245க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.