நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 குறைந்த தங்கம்!
இன்றைய (அக்டோபர் 22) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் மாதத் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்றைய தினமும் தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை சரிந்துள்ளது நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய நிலவரம்
22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,235க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,835க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து, ஒரு சவரன் ரூ.86,680க்கும் விற்பனையாகிறது.

இதற்கிடையில், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.225க்கும், ஒரு கிலோ ரூ.2,25,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.