தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு குட் நியூஸ் - விலை அதிரடிக் குறைவு!
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று (அக்டோபர் 21) அதிரடியான சரிவு பதிவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று கணிசமாகக் குறைந்துள்ளமையானது நகை வாங்கக் காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சிளித்துள்ளது.
அக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே தங்கம் விலையில் அதிரடியான வீழ்ச்சி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,490-க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,390-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் விலையும் குறைந்தது 22 காரட் தங்கத்தைத் தொடர்ந்து, 18 காரட் தங்கத்தின் விலையிலும் சரிவு பதிவாகியுள்ளது.
இதன்படி, 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.115 குறைந்து, ஒரு கிராம் ரூ.10,970-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் ரூ.87,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று கணிசமாகச் சரிந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.230-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,30,000 ஆக உள்ளது.
செம்மணிப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு : பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை IBC Tamil