4 நாட்களாகச் சரிந்த தங்க விலை - இன்றைய நிலவரம் இதோ!
தங்கம் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றமின்றி நீடிக்கிறது.
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தங்கம் விலையில் அதிரடியான சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்த தங்கம் விலை, இன்று நிலையாக உள்ளது.

நேற்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,515-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.600 குறைந்து ரூ.1,08,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,515-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கத்தின் விலையும் இன்று மாற்றமின்றி நீடிக்கிறது. இதன்படி, ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.11,115-க்கும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.88,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.