நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி! இன்றும் குறைந்த தங்கம் விலை
இன்றைய ( அக்டோபர் 13) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். அக்டோபர் மாதத் தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
நேற்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.இதனால் நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்றைய விலை நிலவரம்
22 காரட் தங்கம் விலை இன்று 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து, ரூ.13,685-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,09,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து, ரூ.11,240-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.89,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.