எகிறிய தங்கம் விலை; அதிர்ச்சியில் இல்லத்தரசிகள் - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.5, 410 ஆகவும், சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.43,280 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,432 ஆகவும், சவரனுக்கு ரூ. 256 உயர்ந்து ரூ.35,456 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.75.50 ஆகவும், கிலோ வெள்ளி ரூ.75,500 ஆகவும் விற்பனை செய்யபப்டுகிறது.