சவரனுக்கு ரூ.320 குறைந்த தங்க விலை! இன்றைய நிலவரம் இதோ
இன்றைய (அக்டோபர் 10) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விரிவாக தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
அக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே தங்கம் விலை கணிசமாகக் குறைந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் உயர்வைக் கண்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.13,840 ஆக உள்ளது.ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,10,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.11,370 ஆக உள்ளது. ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.90,960 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றித் தொடர்கிறது.