தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி - இன்றும் விலை அதிரடி சரிவு!

Silver Gold
By Vinoja Oct 15, 2026 05:29 AM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 15ஆம் தேதியான இன்றும் தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் தங்கத்தின் விலை, நகை வாங்கத் திட்டமிடுபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி - இன்றும் விலை அதிரடி சரிவு! | Today Oct 15Th Gold And Silver Price In Chennai

அக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே தங்கம் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டது. அதன் பின்னர் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 குறைந்து ஒரு கிராம் ரூ.13,590க்கும், சவரனுக்கு ரூ.760 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன்படி, கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.3,136 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி - இன்றும் விலை அதிரடி சரிவு! | Today Oct 15Th Gold And Silver Price In Chennai

இன்றும் தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி

இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.13,515க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,115க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.88,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி - இன்றும் விலை அதிரடி சரிவு! | Today Oct 15Th Gold And Silver Price In Chennai

வெள்ளி விலை

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 சரிந்து ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக விற்பனையாகின்றது.