ஒரே நாளில் சவரனுக்கு ரூ.920 உயர்வு – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த 16 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.15,360 வரை குறைந்திருந்தது. இதனால் நகை வாங்கக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், நேற்று (நவம்பர் 23) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.இன்றும் (நவம்பர் 24) தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ரூ.11,715 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.920 உயர்ந்து ரூ.93,720 ஆகவும் உள்ளது.

18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.9,485 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.76,680 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை தற்போது இரண்டு நாட்களாக உயர்ந்து வருவது நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.