தங்கம் விலையில் தொடர் சரிவு - இன்றைய நிலவரம் என்ன?
இன்றைய (நவம்பர் 13) நிலவரப்படி, தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4,480 வரை குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய விலை நிலவரம்
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.960 குறைந்து ரூ.1,01,560 ஆக உள்ளது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.160 சரிந்து ரூ.10,490-க்கும், ஒரு சவரன் ரூ.1,280 குறைந்து ரூ.83,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.195 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்கக் காத்திருப்போருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தைத் தாண்டியுள்ள நிலையில், இந்த விலைச் சரிவு நீடித்தால் விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.