வாரம் முழுவதும் இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஷாக்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி, 22 ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,645 ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160 ஆக விற்பனையாகிறது.
18 ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.24 உயர்ந்து ரூ.4,624 ஆகவும், சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.36,992 ஆக விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து, ரூ.77.00-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கும் விற்கப்படுகிறது.