தொடர் சரிவில் தங்கம் விலை - மக்களே இதுதான் சரியான நேரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (நவ. 21) விலை குறைந்துள்ளது.
குறைவு
அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.11,460க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து ரூ.91,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து, ரூ.169க்கும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,69,000க்கும் விற்பனையாகிறது.
பெண் கலெக்டருக்கு முறையற்ற குறுஞ்செய்தி..! பதவியிலிருந்து விலக TVK mla அருள் விக்னேஷ் முடிவு IBC Tamil
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம் IBC Tamil
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan