குட்நியூஸ் சொன்ன தங்கம் - தொடர் சரிவில் விலை!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1, 120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (நவ. 18) விலை குறைந்துள்ளது.
குறைவு
அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.11,120க்கும், சவரனுக்கு ரூ. 1,120 குறைந்து ரூ.91,100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ. 170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நாமலுக்கு எதிரான சட்ட நடைமுறை : அனுரவுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படும் அபாயம் : கம்மன்பில எச்சரிக்கை IBC Tamil
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் முக்கிய தீர்ப்பு! சிங்கப்பூர் செல்லும் கோட்டாபயவின் திட்டத்தை நிராகரித்தது நீதிமன்றம் IBC Tamil