தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.., சென்னையில் இன்று எவ்வளவு தெரியுமா?

Chennai Gold
By Yashini May 13, 2026 01:52 PM GMT
Report

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையாகுவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓராண்டுக்கு தங்க நகைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியார்.

மேலும், தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை உயர்த்தி மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்கவரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.., சென்னையில் இன்று எவ்வளவு தெரியுமா? | Today May 13Th Gold And Silver Price In Chennai

இதன் எதிரொலியாக தங்கம் விலை இன்று ஒரே நாளில் கடுமையாக உயர்ந்துள்ளது.

22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கும், ஒரு சவரன் ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

அதேபோல், 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.12,860க்கும், ஒரு சவரன் ரூ.7,280 உயர்ந்து ரூ.1,02,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.30 உயர்ந்து ரூ.330க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3,30,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.