அரை லட்சத்திற்கு விற்பனையாகும் 1 சவரன் - இவ்வளவு விலை உயர காரணம் என்ன?
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.51,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச்.29) விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.6,390க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.51,20க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800க்கும் விற்பனையாகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
கடந்த சில நாட்களாக தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க மத்திய வங்கி அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள், பல்வேறு நாடுகளுக்கிடையே மூளும் போர்கள், பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் போன்றவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும் தங்கத்தின் விலை உயர ஒரு காரணமாக கூறப்படுகிறது.