இன்று முதல் அமலானது புதிய கட்டுப்பாடுகள்! எதெற்கெல்லாம் அனுமதி? எதெற்கெல்லாம் அனுமதி இல்லை?
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 14-ம் தேதி வரை தளார்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மே 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த ஊரடங்கானது தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் ஜூன்14-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன தளர்வுகள்..!
இன்று முதல் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பழக்கடைகள், பூக்கடைகளும் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், 30% பணியாளர்களுடன் இயங்க அன்னுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருப்பதால் கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாடகை வாகனங்களான ஆட்டோ, டேக்ஸி உள்ளிட்டவைகள் இ-பதிவுடன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பேரும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர 2 பேரும் பயணம் செய்ய அறிவுறுத்தல்.
மேலும், ஏற்கனவே தொடர்கின்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் என்றும், பேருந்துகள் இயக்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.