வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள்

Tamil nadu Election
By Yashini Mar 26, 2026 07:33 AM GMT
Report

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பது கட்டாயம்.

இதனை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்தின் ECI Net செயலியை பயன்படுத்தலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையெனில், எந்த அடையாள அட்டையைக் கொண்டிருந்தாலும் வாக்களிக்க அனுமதி கிடையாது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள் | Today Last Day To Add Name To Voter List

அதில் பெயர் இல்லாதவர்களுக்கு பெயர் சேர்க்க இன்று (26ஆம் தேதி) கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றுக்குள் விண்ணப்பிக்காதவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது.

இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களின் பெயர்கள் துணைப் பட்டியலில் வெளியிடப்படும்.

அந்த துணைப் பட்டியலில் பெயர் இருந்தால்தான் அவர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்.