ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கியமுதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது.
உயர்வு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து 5,580 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ. 44,640 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 23 உயர்ந்து 4,571 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.36,568 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு அதிரடியாக ரூ.1.10 உயர்ந்து வெள்ளி ரூ.81.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.