4-வது நாளாக தங்கம் விலை சரமாரி குறைவு - இன்றைய நிலவரம்!
தங்கம் விலை தொடர்ந்து 4வது நாளாக குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை.26) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,415 க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கும், கிலோ வெள்ளி ரூ.89,000க்கும் விற்பனையாகிறது.
தங்கம், வெள்ளிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. வருகிற நாட்களிலும் தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பே அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.