பட்ஜெட் தாக்கல்; குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை.23) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,810 க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.95.60க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.400 குறைந்து ரூ.95,600க்கும் விற்பனையாகிறது.

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
