தொடர்ந்து உயர்ந்த தங்க விலை... சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு!
தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை, அதன் பின்னர் சற்று நிலைத்திருந்தாலும், இடையிடையே சிறிய மாற்றங்களை சந்தித்தது.
குறிப்பாக கடந்த வாரத்தில் ஒரே நாளில் காலை மற்றும் மாலை என இரண்டு முறை விலை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு தொடர்ந்து சரிவை பதிவு செய்தது.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை மீண்டும் உயர்வை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,135-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், சவரனுக்கு ரூ.280 உயர்வுடன் ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனையானது. அதைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 20) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,150-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த உயர்வு இன்று (ஜூலை 21) மேலும் வேகமடைந்துள்ளது.

இன்றை நிலவரம்
இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை 22 காரட் தங்கத்தைப் போலவே 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.
கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,035-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.88,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம் வெள்ளி விலையிலும் இன்று உயர்வு பதிவாகியுள்ளது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதனால், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,40,000 ஆக உயர்ந்துள்ளது.