ஆடி முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை - குஷியில் மக்கள்!

Today Gold Price
By Sumathi Jul 17, 2023 05:41 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை 

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கியமுதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

ஆடி முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை - குஷியில் மக்கள்! | Today July 17 Gold And Silver Price

ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், ஆடி முதல் நாளான இன்று சற்று குறைந்து ஆறுதல் அளித்துள்ளது.

குறைவு

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து 5,536 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.44,288 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து 4,535 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.36,280 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.81.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.81,500ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.