தொடர்ந்து 4 நாளாக அதிரடியாக எகிறிய தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஷாக்!

Today Gold Price
By Sumathi Jul 14, 2023 05:52 AM GMT
Report

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கியமுதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

தொடர்ந்து 4 நாளாக அதிரடியாக எகிறிய தங்கம் விலை - இல்லத்தரசிகள் ஷாக்! | Today July 14 Gold And Silver Price

ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், 4 நாட்களாக தொடர்ந்து உயர்வில் உள்ளது.

உயர்வு

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து 5,545 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.64 உயர்ந்து ரூ.44,360 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து 4,542 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.36,336 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.81.30 ஆகவும், ஒரு கிலோ ரூ.81,300ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.