நகை வாங்க போறீங்களா? தொடர்ந்து இறங்கும் தங்கம் விலை!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கியமுதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து 5,482 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 4,491 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.16 குறைந்து ரூ.35,928 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.77.10 ஆகவும், ஒரு கிலோ ரூ.77,100ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan