வார இறுதியில் ஏறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.

ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்துள்ளது.
உயர்வு
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5440 க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து 75.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் நியாயம் கோருவது நியாயமற்றது! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil