ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலை திறப்பு!
சென்னை லேடி வெலிங்டன் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது. நேற்று ,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் , சென்னை மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி செலவில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கபட்ட நினைவிடம் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா இல்லமும் திறக்கப்பட்டது.
ஆனால், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருப்பதால், மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா சிலையை திறந்துவைத்தார்.
துணை முதல்வர் ஓபிஎஸ் , அமைச்சர்கள் கேபி அன்பழகன் உள்ளிட்டோர் முன்னிலையில் ஜெயலலிதாவின் 9 அடி உயர முழு உருவ வெண்கல சிலை திறக்கப்பட்டது. ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைத்த ட்ரோன் ஈடுபடுத்தப்பட்டது.
ஜெயலலிதா சிலை மீது போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற போர்வையை ட்ரோன் மூலம் முதல்வர் அகற்றிய நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் ட்ரோன் மூலம் சிலை மீது மலர் தூவப்பட்டது.