தங்கத்தை தூக்கி சாப்பிட்ட வெள்ளி - விலையை கேட்டா ஆடிப்போயிருவீங்க
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.19) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.1,07,600க்கும், கிராமுக்கு ரூ.170 அதிகரித்து ரூ.13,450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை வரலாறு காணாத வகையில், கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.318க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்து ரூ.3,18,000க்கும் விற்பனையாகிறது.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil