சரமாரியாக எகிறிய தங்கம் விலை; சவரன் இவ்வளவா? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.3) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ. 58,080 -க்கும், கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 7,260 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.5,995-க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.47,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.100க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000க்கும் விற்பனையாகிறது.
அர்ச்சுனா எம்.பி.க்கு எதிரான பேஸ்லைன் விபத்து வழக்கு விசாரணை: ஜனவரி 05ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு IBC Tamil
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : உக்ரைன் போரில் நான்கரை இலட்சம் வீரர்கள் பலி IBC Tamil