ஈரோடு இடைத்தேர்தல் ; வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசிநாள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள்.
96 பேர் வேட்பு மனுத்தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இருந்த ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 31ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடைபெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
இதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற இன்று (10.2.23) மாலை வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்
சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு நடைபெறுகிறது.வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தால் இடைத்தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் வேட்பாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.