இன்றே கடைசி நாள்...இனி வாய்ப்பு இல்லை...சீக்கிரம் போங்க - அமைச்சர் வேண்டுகோள்

V. Senthil Balaji Government of Tamil Nadu
By Thahir Feb 15, 2023 07:40 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலைக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி 

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தொடர்ந்து மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இன்றுடன் கடைசிநாள் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Today is the last day to request the minister

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலைக்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சர் அறிவுறுத்தல் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.59 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 97.07% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள், கடைசி நாளான இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.