மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு இல்லை: அமைச்சரின் பேச்சால் அதிர்ச்சி
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு இல்லை என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2வது தவணையாக ரூ. 2 ஆயிரம் பணம் மற்றும் 14 வகையான மளிகை பொருள் வழங்கும் நிகழ்ச்சி கரூர் நகர், படிக்கட்டுத்துறை பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்க படாது என்றும், இன்றே கடைசி நாள் என்றும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஊரடங்கு தளர்வுகளால் தான் இயல்பு நிலை திரும்பி வருகிறது என்றும், எனது மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.