இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள் - குவியும் வாழ்த்து..!
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இசை உலகின் ஜாம்பவான், இசைஞானி, மேஸ்ட்ரோ என்று அழைக்கப்படுபவர் இசையமைப்பாளர் இளையராஜா.
இவர் கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளைக் கடந்து அவர் தனது இசையால் மக்களை இன்றும் மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 80ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரபலங்கள் , ரசிகர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
Wishing Music Maestro Ilayraja sir A very happy musical Birthday ????️?
— R∆JE$Hᵛᵃˢᵗᵘⁿⁿᵃᴺᵀᴿ³⁰ (@SOseetarama) June 2, 2022
The man who introduces the unique Medicine in the form of Music which can heals the any of the depressions.during Sleeping , travel ilayraja's songs alone stand with me#Ilaiyaraaja #HBDIlaiyaraaja pic.twitter.com/fOsHMEvJcR
முன்னதாக இளையராஜா சதாபிஷேகம் நிகழ்வு திருக்கடையூர் ஆலயத்தில் நடைபெற்றது. சதாபிஷேக விழாவில் இயக்குனர் பாரதிராஜா ,இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா ,மகள் பவதாரணி ,சகோதரர் கங்கை அமரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.