அமித்ஷா பெரிய சங்கி அண்ணாமலை சின்ன சங்கி: பரபரப்பான திருப்பூர் பாஜக கூட்டம்!
அமித்ஷா பெரிய சங்கி, அண்ணாமலை சின்ன சங்கி என பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலைக்கு திருப்பூரில் கொடுக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பேச்சால் தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் பாஜக தமிழக தலைவராக பொறுப்பேற்க செல்லும் அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலையை வரவேற்று பேசிய திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில்வேல்
அமித்ஷா என்ற பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்தி தான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை அவர்கள் என பேசினார்.

அதோடு தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவது முக்கியமல்ல. தமிழக மக்களுக்கு திராவிட கும்பலில் இருந்து விடுதலை பெற அண்ணாமலை முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது விதியாகும் என்று பேசியசெந்தில்வேல்.
திருப்பூருக்கு வருகை தந்துள்ள முன்னாள் காக்கியும், இந்நாள் சங்கியுமான அண்ணாமலை அவர்களை வரவேற்புரை ஆற்றுமாறு அழைக்கிறேன் என பேசினார்.
இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் செந்தில் வேல் பாராட்டுகிறாரா? அல்லது கிண்டல் செய்கிறாரா? என தெரியாமல் பலர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சிலர் நகைச்சுவையாக பேசுவதாக எண்ணி அமைதியாகிவிட்டனர்.