மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

Chennai TN Weather Weather
By Thahir Dec 12, 2022 02:39 AM GMT
Report

மழையின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு 

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 

இதையடுத்து அதிகாலை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

Today is a holiday only for schools due to rain

இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அரக்கோணம், நெமிலி தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்க விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.