கனமழை எதிரொலி; பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக இன்று நீலகிரி மாவட்டத்தில் உதகை, ஊட்டி, குந்தா மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பரவலாக பெய்து வரும் மழை
தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களிலும், மேற்கும் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது பரவலாக மழைபெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புபடி இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை
கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குதொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்று நீலகிரி மாவட்டத்தில் உதகை, ஊட்டி, குந்தா மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதன் காரணமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (8.8.2022) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜீபா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.