இன்று 17 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம்

By Thahir Aug 29, 2022 09:19 AM GMT
Report

தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று கனமழை எச்சரிக்கை 

தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலும் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று  17 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் | Today Heavy Rain In 17 Districts

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனுட் இருக்கும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.