கொஞ்சம் கருணை காட்டும் தங்கம் - என்ன ரேட் தெரியுமா?

Today Gold Price
By Sumathi Oct 23, 2023 05:38 AM GMT
Report

தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் சரிந்து விற்பனையாகிறது.

தங்கம் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

கொஞ்சம் கருணை காட்டும் தங்கம் - என்ன ரேட் தெரியுமா? | Today Gold Silver Rate In Oct 23

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில் சரிந்துள்ளது.

இன்றைய நிலவரம்

அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ. 5,660 ஆகவும், சவரனுக்கு ரூ.80 சரிந்து ரூ. 45,280 ரூபாயாகவும் உள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ .6,130 ஆகவும், 8 கிராம் 49,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல், கிராம் வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.78.50 ஆகவும், கிலோ வெள்ளியின் விலை ரூ.200 அதிகரித்து ரூ.78,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.