தொடர் உச்சத்தில் தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது.
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.17) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600-க்கும், கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,450-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 104 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்ரேலை அடித்து நொறுக்கும் ஈரான்...!: பாலிஸ்டிக் ஏவுகணைகளால் அதிரும் நகரங்கள் - பதிவான மரணம் IBC Tamil

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
