வெள்ளி ஒரே நாளில் ரூ.20,000 உயர்வு- பேரதிர்ச்சியில் மக்கள்
Daily Gold Rates
By Fathima
தங்கம் விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில் நேற்று சற்றே விலை குறைந்து இருந்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் பேரிடியாக ஒரே நாளில் 3600 ரூபாய் அதிகரித்துள்ளது பாமர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி கிராம் ஒன்றுக்கு ரூ.14,200ம் சவரன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 600க்கும் விற்பனையானது.
இன்று மீண்டும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது, சவரன் 3600 ரூபாய் உயர்ந்து ரூ.1,17,200க்கும் விற்பனையாகிறது, கிராம் ரூ.14,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராம் 20 ரூபாய் உயர்ந்து 360 ரூபாய்க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.