தொடர்ந்து குறைந்து கொண்டே போகும் தங்கம் விலை - மிஸ் பண்ணாதீங்க.!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 குறைந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை திடீரென ரூ.46,000த்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ளது.
தொடர் சரிவு
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 200 குறைந்து சவரனுக்கு ரூ. 45,000-க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 25 குறைந்து ரூ.5,625 க்கு விற்பனையாகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,099 ரூபாயாகவும், ஒரு சவரன் 48,792 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ. 78.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிலோ ரூ.78,000க்கு விற்பனையாகிறது.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan