Today Gold Rate: தொடர் சரிவை சந்திக்கும் தங்க விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாக தங்க விலை அதிகரித்து வந்த நிலையில், இன்றைய தினம் தங்க விலை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்க விலை
கடந்த நாட்களாக தங்க விலையில் பாரிய உயர்வு இருந்தது.அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,200-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து, தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை
தங்கம் குறைந்த போதிலும் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. மாறாக ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.