Today Gold Rate:அசுர வேகத்தில் ஏறிய தங்கம் விலை- சவரன் எவ்வளவு தெரியுமா?

Today Gold Price Daily Gold Rates Gold
By DHUSHI Jun 13, 2025 04:48 AM GMT
Report

கடந்த சில நாட்களாக தங்க விலை அசுர வேகத்தில் அதிகரித்து மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தங்க விலை

சென்னையில் தங்க விலை கடந்த 10ஆம் திகதி தங்க விலை சற்று சரிந்து இருந்து நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஏற ஆரம்பித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 20-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Today Gold Rate:அசுர வேகத்தில் ஏறிய தங்கம் விலை- சவரன் எவ்வளவு தெரியுமா? | Today Gold Rate June 13 2025 In Tamil

இந்த நிலையில், இன்றைய தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 195 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கும் சவரனுக்கு 1,560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையாகிறது.

கடந்த 3 தினங்களில் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளி விலை

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் மெது மெதுவாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில், கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.    

Today Gold Rate:அசுர வேகத்தில் ஏறிய தங்கம் விலை- சவரன் எவ்வளவு தெரியுமா? | Today Gold Rate June 13 2025 In Tamil