புதிய உச்சத்தில் தங்கம் விலை - எவ்வளவுனு பாருங்க!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (மார்ச் 28) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 அதிகரித்து ரூ.66,720க்கும், கிராமுக்கு ரூ.105 அதிகரித்து ரூ.8,340க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.114-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் - சோமரத்ன ராஜபக்சவின் திடீர் முடிவு: அச்சத்தில் தென்னிலங்கை IBC Tamil

Reecha Food Festival: பாரம்பரியத்தை மீண்டும் ஒரு முறை பறைசாற்றிய றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா! Manithan
