இறங்கிய வேகத்தில் உச்சத்தில் ஏறிய தங்கம் விலை - ரேட் இதுதான்!
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.30) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.60,880க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.7,610க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.106-க்கும், கிலோ வெள்ளி ரூ.1,60,000க்கும் விற்பனையாகிறது.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
