தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம் விலை - என்ன காரணம்!

Today Gold Price
By Sumathi Feb 08, 2023 04:37 AM GMT
Report

தங்கம் விலை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்கம் விலை

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. 2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த தினம் முதல் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

தொடர்ந்து ஏற்றத்தில் தங்கம் விலை - என்ன காரணம்! | Today Gold Rate 08 2 2023

இந்நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.43,064க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,383க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ரூ.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.