தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?(07-10-2026)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
அக்டோபர் 1ஆம் தேதி சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,09,440க்கு விற்பனையானது. மறுநாள் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,10,200க்கு விற்பனையானது.
அக்டோபர் 3ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,675க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400க்கும் விற்பனையானது.
மேலும், 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.1,09,280க்கும், ஒரு கிராம் ரூ.13,660க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,680க்கும், ஒரு கிராம் ரூ.13,710க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.